மருக்கள் பாலுண்ணி மற்றும் கால் ஆணி ஆங்கில மருத்துவம் warts,corns,and calluses treatment
மருக்கள் பாலுண்ணி மற்றும் கால் ஆணி ஆங்கில மருந்துகள் ஒரு பார்வை WARTS,CORNS AND CALLUSES TREATMENT.
வார்டால் ப்ளக்ஸி ஜெல்(WARTOL FLEXIGEL) ஒரு மேற்பூச்சி திரவ நிலையில்( TOPICAL SOLUTION) உள்ள ஒரு மருந்தாகும். இது பாலுண்ணி, மருக்கள், மற்றும் கால் ஆணி ஆகிய நோய்களுக்கு பயன்படுகிறது 1.மருக்கள்.பாலுண்ணி (WARTS )
2.மருக்கள்
3.கால் ஆணிகள்.
1.உள்ளடக்கம் (contains) 1 சாலிசிலிக் அமிலம். ஜ.பி16w/w (SALICYLIC ACID). I.P. 16w/w
2.லக்டிக் அமிலம் I.P 16w/w (LACTIC ACID). I.P16 w/w.
2 . செயல்படும் விதம். (Mechanism of action) சாலிசிலிக் அமிலம் ஒரு கெரட்டோலிடிக் மருந்து. இது சருமத்தின் தடினமான மேலடுக்கை உடைத்து , சருமத்தின் ஈரப்பதத்தின் அளவை அதிகரிப்பதின் மூலம் பாலுண்ணி, மருக்கள்,கால் ஆணி, படிப்படியாக உரிக்கப்படுவதற்கு காரணமாகிறது.லாக்டிக் அமிலம் சிகிச்சை அளிக்கப்பட்ட பகுதியில் ஒரு பாதுகாப்பு பூச்சு உருவாக்குகிறது இது அந்தப் பகுதியை சுத்தமாக வைத்திருக்க உதவுகின்றது
2.பயன்படுத்தும் முறை ( Direction for Use)
1.வெளிஉபயோகம் மட்டுமே 2 .சிகிச்சை முழுமையான வெற்றி பெற 6முதல்12 வாரம் பயன்படுத்த வேண்டும் என்பதனை நினைவு கொள்க. 3. மருக்கள் ஒரு தொற்று நோயாகும் எனவே நோயாளி தனது உடைமைகளை தனியாக பயன்படுத்த வேண்டும். 4. காலை மாலை இருவேளை மருந்தினை பயன்படுத்த வேண்டும். 5. வார்டால ப்ளக்ஸி ஜெல் பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்ட எளிய மற்றும் துல்லியமானதாகும். 6. இது விரைவாக உலர்ந்து விடும் பாதிக்கப்பட்ட பகுதியில் ஒரு படலத்தை விட்டு விடும் 7. இதில் அடங்கியுள்ள பொருட்கள் சருமத்தை ஹைட்ரேட் செய்ய உதவுகின்றன மற்றும் செயலில் உள்ள பொருள்கள் ஊடுருவலுக்கும் நீடித்த செயல்பாட்டையும் உறுதி செய்கிறது 8. பாதிக்கப்பட்ட இடத்தை ஐந்து நிமிடம் சூடான நீரில் ஊறவைக்கவும் . 9. கடினமான தோலை அகற்ற படிக்கல் ,எம்ரி பேப்பர் ஆகியவற்றை பயன்படுத்தவும். 10. கொடுக்கப்பட்டுள்ள அப்ளிகேட்டரை பயன்படுத்தி சாதாரண தோலுடன் தொடர்வதனை பாதுகாத்துக் கொள்ளவும். 11. வார்டால் பிளக்சி ஜெல் ஒவ்வொரு துளியும் உலர்ந்த பிறகு அடுத்தடுத்து பயன்படுத்தவும். 12. மற்ற பகுதியில் பரவும் மருந்தினை டிஷ்யூ பேப்பர் பயன்படுத்தி துடைக்க வேண்டும். 13. பாதத்தின் உள்ளங்கால் பகுதியில் வார்ட்டால் ப்ளக்ஸி ஜெல் பயன்படுத்திய பின்பு அதனை பிசின் பிளாஸ்டரால் மூடவும் இது மருந்தின் பயன்பாட்டை அதிகரிக்கும் மற்ற பகுதியில் மறைக்கப்பட வேண்டியதில்லை.
Comments
Post a Comment