Betanovate s usage in Tamil
Betnovate s usage in Tamil
1.அறிமுகம்( introduction )
பெட்னாவேட் எஸ் களிம்பு தோலில் உள்ள இறந்த செல்களை நீக்கி தோலை புதிய பொலிவுடன் வைக்க உதவுகிறது . பெட்னாவேட் எஸ் களிம்பு சருமத்தின் நிறத்தையோ, அழகையோ மேம்படுத்த உதவாது. பெட்னாவேட் எஸ் களிம்பு. தோல் 1.அலர்ஜி (ECZEMA)
2. தோல் தடிப்புடன் கூடிய அலர்ஜி
(Psoriasis)
3.தோல் சிவத்தல்.(Skin Redness)
மேலும் கொசுக்கள், எறும்புகள் மற்றும் விஷபூச்சிகளால் ஏற்படும் கடிகளுக்கு. (bites) கடிபட்ட பகுதிகளில் குறிப்பிட்ட ஒரு வார காலத்திற்கு அந்தப் பகுதியில் பயன்படுத்துவதற்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
2.உள்ளடக்கம் (contains)
1 பீட்டாமெத்தசோண். BETAMETHASONE
2.சாலிசிலிக் அமிலம். (SALICYLIC ACID)
3. மருந்தின வகைப்படுத்துதல் classification of drugs
1. பீட்டா மெத்தசோன் ஒரு கார்டிகோ ஸ்டீராய்டு( CORTICOSTEROID)ஆகும். 2.சாலிசிலிக் அமிலம் ஒரு கெரட்டோ லிட்டிக் (KERATOLYTIC AGENTS) ஆகும்.
4.செயல்படும் விதம் (mechanism of action) 1.பீட்டாமெத்தசோன் (BETAMETHASONE) கார்டிகோ ஸ்டீராய்டு. (CORTICOSTEROID ).
கார்டிகோ ஸ்டீராயிடு உயிர் அணுவில் உள்ள செல் சவ்வு வழியாக நுழைந்து சைட்டோபிளாசத்தில் உள்ள சைட்டோபிளாச உணர்வேந்தி புரதங்களுடன் வினைபுரிந்து ஒரு ஸ்டெராய்டு ஏற்பி வளாகத்தை உருவாக்குகின்றது இந்த புரத தொகுப்பானது தோளில் உள்ள டெர்மல், எபிடெர்மல் செல்களில் ஏற்படும் அலர்ஜி, மற்றும் தோல் நோய்களில் பங்கேற்கும் லுகோசைட்களிகளின் பெருக்க செயல்பாடுகளை கட்டுப்படுத்துகிறது. 2.சாலிசிலிக் அமிலம். . (SALICYLIC ACID ) கெரட்டோ லிட்டிக் (KERATOLYTIC AGENTS) தோளில் கடினமான மேலடுக்கை உடைத்து தோலின் ஈரப்பதத்தின் அளவை சீராக வைத்திருக்க உதவுகின்றது. 5 பக்க விளைவுகள். (SIDE EFFECTS) 1.அரிப்பு (itching),. 2.எரியும் உணர்வு. ( Burning sensation). 3.எரிச்சல். Irritation ) 4.தோல் வறட்சி. (Skin dryness )
6. நீங்கள் அதிகமாக ஸ்டிராய்டு கீரிம் பயன்படுத்தினால் ஏற்படும் விளைவுகள்.
1. தோல் சிதைவு. SKIN ATROPHY.
2.தோல் சுருக்கம். (Skin thinning)
3.ஹைப்பர்டிரைகோசிஸ் (HYPERTRICHOSIS)
சில ஸ்டீராய்டுகளின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன அவைகள் 1பீட்டா மெத்தசோன். (BETAMETHAZONE). 2.க்ளோபட்டசால். (CLOBETASOL). 3.மொமட்டசோன். (MOMETASONE). 4.ப்ளூடிக்கசோன்.
(FLUTICASONE).
7.பொதுவான பார்வை. (GENERAL INFORMATION)
ஸடிராய்டு கீரிம் முதலில் தோலில் ஒரு வெண்மையான மற்றும் பிரகாசமான தோற்றத்தையும் உண்டாக்கும் ஆனால் இது ஒரு தற்காலிகமான செயலே. நீங்கள் எந்த ஒரு பேசியல் கிரீமிலும் ஸ்டீராய்டு கலந்துள்ளனவா என்பதனை சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.ஏனெனில் பெரும்பாலான பக்க விளைவுகள் நிரந்தரமாக இருக்கலாம்.
உங்கள் தோல் மருந்துவரை அணுகி சரியான தீர்வு காணவும்.
Comments
Post a Comment