ஆதார் கார்டு டவுன்லோட் செய்வது எப்படி
ஆதார் கார்டு டவுன்லோட் செய்வது எப்படி தற்பொழுது உள்ள காலநிலையில் சிம் கார்டு , பான்கார்டு, வங்கி கணக்கு, வாக்காளர் அடையாள அட்டை, மற்றும் பிறப்பு முதல் இறப்பு சான்றிதழ் வரையில் அனைத்து முக்கிய சேவைகளிலும், ஆதார் கார்டு இருந்தாலே மட்டுமே பதிவு செய்து கொள்ள முடியும். அந்தளவுக்கு ஒரு முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு மாறியுள்ளது. இப்படிப்பட்ட ஒரு ஆதார் எந்தளவுக்கு முக்கியம். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கார்டு தொலைந்து விட்டால் அடுத்து என்ன செய்வது என்ற கவலை தொற்றிக் கொள்ளும். ஆனால் இதற்காக இனி நீங்கள் எங்குமே அலைய வேண்டியதில்லை இன்று ஆதாரில் திருத்தம் அல்லது மொபைல் எண் மற்றும் முகவரி மாற்றம். ஏன் உங்களது ஆதார் எண் தெரியாவிட்டாலும் கூட, ஆன்லைனில் எடுத்துக் கொள்ளும் அளவுக்கு டிஜிட்டல் வசதிகள் வந்துள்ளன. 1.எவ்வாறு பதிவிறக்கம் செய்யலாம் நீங்கள் இந்திய அரசின் தனித்துவமான அடையாள ஆணையத்தின் (UIDAI) அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் 1.ஆதார் அட்டை டவுன்லோட் செய்ய இதற்காக நீங்கள் https://resident.uidai.gov.in/ என்ற இணையதளத்திற்குள் செல்லலாம் . மேலே உள்ள 3 வது க...